தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது குறித்து நாளை 04.05.2022 முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்




முன்கூட்டியே கோடை விடுமுறையாதேர்வுகளை விரைந்து முடிக்க திட்டம்!

சென்னைகத்திரி வெயில் நாளை துவங்க உள்ள நிலையில்ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குஆண்டு இறுதி தேர்வை விரைந்து முடித்துமுன்கூட்டியே விடுமுறை விடபள்ளிக்கல்வி துறை ஆலோசித்து உள்ளது.


தமிழகத்தில்நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள்கொரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட மூன்று மாதங்கள் தாமதமாக துவங்கினவிடுமுறையும் கூடுதல் நாட்கள் அளிக்கப்பட்டதுஇதனால்கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுமாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டதுஇதை சமாளிக்கஇந்த ஆண்டு மட்டும் இம்மாதம் 12ம் தேதி வரை பள்ளிகளை நடத்தபள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது.

 


கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுதும்கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில்நாளை முதல் கத்திரி வெயில் துவங்க உள்ளதுஇதனால்வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறதுஎனவேபள்ளி மாணவர்களுக்குவிரைவில் தேர்வை முடித்துகோடை விடுமுறையை முன் கூட்டியே விடலாமா எனபள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆலோசித்துள்ளனர்.

 

இதன்படிஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும்இந்த வாரத்துடன் பள்ளி வேலை நாட்களை முடித்து கொள்ளலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளதுஆனால்திடீரென அறிவித்தால்மாணவர்களுக்கான கற்றல் திறனை அறியும் ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்படும் எனபள்ளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதுவிடுப்பு குறித்துபள்ளிக்கல்வி துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


"பொதுத் தேர்வு எழுதும் பொழுது மாஸ்க் கட்டாயம் கிடையாது" - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்