ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்.

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகள் என்றால் 5 முறையும் இலவசமாக பணமெடுக்கலாம். 

இதற்கு மேல் பணமெடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். 

இந்தக் கட்டணங்கள் இன்று முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. 

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் இலவச சேவைக்கு அதிகமாக பணமெடுக்கும் போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் 21 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.