சென்னை- --தமிழகம் முழுதும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. 'ராகிங்' பிரச்னையின்றி, ஜூனியர் மாணவர்களை வரவேற்க, சீனியர் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இனிய முறைதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அனைத்து வகை கல்லுாரிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவம்பர் 1ல் நேரடி வகுப்புகள் துவங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை, பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் இனிய முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பள்ளி படிப்பை முடித்த பின் நேரடியாக கல்லுாரிகளுக்கு வருவதால், அவர்களுக்கு கல்லுாரி நடைமுறைகள் குறித்து எளிய முறையில் பயிற்சி அளிக்கவும், கல்லுாரி முதல்வர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.'ரூட் தல'இதற்கிடையில், சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்கள், பஸ்கள் மற்றும் கல்லுாரி வளாகங்களில் 'ரூட் தல' என்ற பெயரில், ஜூனியர் மாணவர்களை ராகிங், ஈவ் டீசிங் செய்யாமல் தடுக்க, போலீசார் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் வழியே, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
0 Comments
Post a Comment