சென்னை-சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, முதல் பருவ தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவலால், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில், நாடு முழுதும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில், எந்த தேர்வும் நடத்தப்படாமல், மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, அக மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுக்கு பதில், புதிய முறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல் பருவ தேர்வு நவ., - டிசம்பரில் நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை இன்று வெளியாகிறது. பிளஸ் 2வுக்கு, 114 பாடங்களுக்கும்; 10ம் வகுப்பில், 75 பாடங்களுக்கும் பருவ தேர்வு முறை அமலாகிறது. முக்கிய பாடங்கள் மற்றும் விருப்ப பாடங்கள் என, இரண்டு பிரிவு பாடங்களுக்கு, பருவ தேர்வு அட்டவணை தனித்தனியாக வெளியிடப்பட உள்ளது.இரண்டாம் பருவ தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment