வேலுார் : ஊராட்சி செயலாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அணைக்கட்டு தேர்தல் அதிகாரி கனகராஜ் கூறினர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 51 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 50 ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், கந்தனேரி, இலவம்பாடி, அக்ராகரம், பாக்கம், குருவராஜ பாளயைம் ஆகிய ஐந்து ஊராட்சிகளில், செயலாளர்களின் மனைவிகள் சுயே., போட்டிடுவதாகவும், இதற்காக செயலாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்தன.

இது குறித்து அணைக்கட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான கனகராஜ் வெளியிட்ட உத்தரவு: அணைக்கட்டு ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்கள் அலுவலகம் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வேண்டும். ஊராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.