சென்னை:ஒன்று வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நவ.1 முதல் பள்ளிகளை திறப்பதுகுறித்து அக்.,21ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செப். 1 முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதைதொடர்ந்து எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி பாடம் நடத்த நவ. 1 முதல் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி அணுகுவது; 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை எவ்வாறுபள்ளி கல்வித் துறை செயல்படுத்த போகிறது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அக்.,21ம் தேதி சென்னையில் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.