10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்:-

சென்னை-பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் தேர்ச்சி சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது;

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்து, 'ஆல் பாஸ்' பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் இன்றி அனைத்து பாடங்களிலும்தேர்ச்சி என்ற குறிப்புடன் இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு, https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம் வழியே வேலைவாய்ப்பு பதிவானது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும்.

வரும் 18ம் தேதி வரை, பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும்.எனவே, மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் ஆகிய விபரங்களை, பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.