அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க திட்டமிடப்பட்டது.  இரண்டு கட்ட பயிற்சிகள் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக வழங்கப்பட்டது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் 6.9.21 முதல் 9.9.21 வரை மற்றும் 11.9.21 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சிக்கு அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்களாகவே TN EMIS app ல் 2.9.21 யிலிருந்து சுய பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு :

Hi-Tech Lab Training - How To Self Registration -- View here 

 * Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். 

* TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும். 

* Login செய்ததும் click Teacher Training Module 

* Select training யினை Click செய்யவும் . அதில் தற்பொழுது கலந்துக்கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும்.

* பின்பு பயிற்சி மையத்தினை ( Training Venue ) Click செய்யவும். 

* ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும். பயிற்சியில் கலந்துக்கொள்ள தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பயிற்சி மையத்தினை தெரிவு ( Select ) செய்து submit / save செய்ய வேண்டும்.

* அவ்வாறு submit / save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக்கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully என காண்பிக்கப்படும்.

Hi-Tech Lab Training - How To Self Registration -- View here