சென்னை-- --பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் காலாண்டு தேர்வுகள் 'ஆன்லைன்' வழியில் இன்று துவங்குகின்றன.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


தமிழக அரசின் குறைக்கப்பட்ட பாடத் திட்டப்படி இந்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், காலாண்டு தேர்வு என்ற முதல் பருவ தேர்வுகள் இன்று பல பள்ளிகளில் துவங்குகின்றன. ஆன்லைன் வழியில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என, மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதற்கிடையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்தைப் பின்பற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு இந்த ஆண்டு முதல், இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதில், முதல் பருவத் தேர்வு நவம்பர் மற்றும்டிசம்பருக்கு இடையிலும்; இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் இடையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.