பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!!! (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)
30.6.2021 அன்று 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடித்து 1.7.2021 அன்றோ
1.7.2021 முதல் அரசாணை வெளியிட்ட தேதியான 23.8.2021 க்குள் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள்
365 நாட்கள் மகப்பேறு விடுப்பு துய்க்கும் வகையில் தொடர்ந்து மகப்பேறு விடுப்பு அனுமதிக்கலாம் என்ற தெளிவுரை கிடைக்கப்பெற்றுள்ளது.
பணியில் சேர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்து மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு எடுத்திருந்தாலும் அதை இரத்து செய்து மகப்பேறு விடுப்பாக வழங்கலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.மகப்பேறு விடுப்பு எடுத்து பணியில் சேர்ந்தவர்கள்
இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
விபரம் தேவை எனில் தொடர்பு கொள்ளவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதுமான் அலி கா
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
0 Comments
Post a Comment