சென்னை: நீட் தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி சானிடைசர் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைபெறும் மையத்துக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து வரத் தொடங்கலாம். 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும், அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.