laptop-finger.jpg?w=360&dpr=3

தமிழகத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர, வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கவின் கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, ஆலையக சுடுமண் வடிவமைப்பு, ஆலையக துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகிய படிப்புகள் உள்ளன. இவை, நான்காண்டு இளங்கவின் கலை, இரண்டாண்டு முதுகவின் கலை படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றன.


இவற்றுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள்  இணையதளத்தில் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50; மற்றவா்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தைத் தொடா்புடைய கல்லூரி முதல்வரின் வங்கிக் கணக்கில் செலுத்தி, வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 2561 0878, 0435 248 1371 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.