சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படித்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு செப்டம்பர், மாதம் நடக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்த துணைத் தேர்வு எ ழுதுவதற்காக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்( தக்கல் உட்பட) இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 13, 14ம் தேதிகளில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே இந்த மாணவர்கள் உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும்.