அக்டோபர் இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலை ஏற்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "3-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று காலை 7மணிக்கு துவங்கியது. முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் மாலை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்


18மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தும்பணி அக்டோபர் இறுதிக்குள் முடிந்துவிடும். மெகா தடுப்பூசி முகாம்களில் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் , முன்களப்பணியாளர்கள், காவல்துறை என அனைத்து துறையும், சிறப்பாக செயல்பட்டார்கள் அனைவருக்கும் நன்றி. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும். மேலும் தொடர்ந்து தடுப்பூசி முகாம்களில் பணியாற்றி வந்த சுகாதார பணியாளர்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.