சென்னை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்நாளை மறுநாள் வழங்கப்படுகிறது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2019- - 20; 2020- - 21ம் கல்வி ஆண்டுகளில், முறையே பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 17ம் தேதி வழங்கப் படும். அதை மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களும், பெற்றோரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பள்ளிகளுக்கு சென்று சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.