முதல்வர் சந்திப்பு:

ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் சந்திப்பதற்காக நேற்று அழைக்கப்பட்டிருந்தார்கள். 

அவர்கள் அறிவாலயம் சென்று காத்திருந்த பொழுது அவர் அங்கு வரவில்லை. நேற்று திருமணநாள் என்பதால் அறிவாலயம் வர இயலவில்லை. அதனால் ஜேக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டு அங்கு சென்று சந்தித்தார்கள்.

மாநில ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து 10 நிமிடம் பேசினார். கோரிக்கை மனுவை வாங்கி முழுவதுமாகப் படித்துப் பார்த்து விரைவில் உங்களை அழைத்துப் பேசுகிறேன் என்று கூறி முடித்துள்ளார்.