சென்னை:இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான சர்வதேச கல்வி தொடர்பு கண்காட்சியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலையின் சர்வதேச கல்வி தொடர்பு மைய இயக்குனர் நாகராஜன் அனுப்பிய சுற்றறிக்கை:இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலை மற்றும் சர்வதேச பல்கலைகள் இணைந்து, அண்ணா பல்கலையின் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான, ஆன்லைன் வழி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

வரும் 7ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை, ஆன்லைன் வழியில் இந்த கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை அரிய வாய்ப்பாக அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.விருப்பம் உள்ள மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தளத்தில், முன் கூட்டியே பதிவை மேற்கொண்டு கண்காட்சியில் பங்கேற்று, வெளிநாட்டு பல்கலைகளின் படிப்புகளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.