சென்னை:'மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு, ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்களுக்கு பிடித்த பள்ளிகளை தேர்வு செய்ய உரிமை உள்ளது. எனவே, படிக்கும் பள்ளிகளை மாற்ற விரும்பும் பெற்றோர் மற்றும் மாணவர்கள், இதுகுறித்து, தங்கள் பள்ளியிடம் தெரிவித்து, மாற்றுச்சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.

அவர்கள் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள், பள்ளிகள் தரப்பில், சான்றிதழை வழங்க வேண்டும். கட்டண பாக்கியை காரணம் காட்டி, சான்றிதழை நிறுத்தி வைக்க கூடாது. இதுகுறித்து புகார் எழுந்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.