மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23.08.21 சார்ந்து சில விளக்கங்கள் :

1) மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது

(12 மாதங்கள்)

2) 01.07.2021 முதல் அமலுக்கு வருகிறது...

01.07.21 க்கு பிறகு விடுப்பு எடுப்பவர்களுக்கு 1 ஆண்டு விடுப்பு...

இதில் தான் பலருக்கு சந்தேகம்...

3) 01.07.2021 க்கு முன்பிருந்து

01.07.2021 அன்று விடுப்பில் இருப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்..

4) தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5) 01.07.21 முதல் 23.08.21 வரை 9 மாத  மகப்பேறு விடுப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள் இந்த கூடுதல் 3 மாத விடுப்பை பயன்படுத்த இயலாது.

அவர்கள் மருத்துவர் தகுதி சான்றிதழ் அடிப்படையில் தான் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்து இருப்பார்கள்...

எனவே மீண்டும் மகப்பேறு விடுப்பு வழங்க இயலாது.

அதே சமயம்... சிலர் 1/7/21 முதல் 23/08/21 வரை 9 மாதம் மகப்பேறு விடுப்பு முடிந்த பிறகும் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பில் இருந்தால் அவர்கள் இந்த 365 நாட்கள் விடுப்பை பயன்படுத்த இயலும்..

6) குழந்தை பிறப்பிற்கு முன் + குழந்தை  பிறப்பிற்கு பின் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்...

(குழந்தை பிறந்த தினத்தில் இருந்து விடுப்பு கட்டாயம் துவங்க வேண்டும்)

7) உயிரோடு உள்ள இரண்டு குழந்தைகள் வரை இந்த விடுப்பு உண்டு.

8) தகுதி காண் பருவத்தினர் தற்காலிக பணியினர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு...

9) அதிக நண்பர்களின் ஐயம் ...

 மனைவி மகப்பேறு விடுப்பு போது ஆண்களுக்கு விடுப்பு உண்டா - தமிழக அரசில் அப்படி ஒரு விடுப்பு கிடையாது.

10) மகப்பேறு விடுப்பு புதிய  அரசாணை

 MATERNITY LEAVE GO 84 - CLICK HERE TO DOWNLOAD