புதுடில்லி-கோவிட் தொற்று பரவல் காலத்திலும், இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு 55 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கச் சென்றுள்ளனர்.

டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவலுக்கு மத்தியிலும், முன் எப்போதும் இல்லாத அளவை விட அமெரிக்காவுக்கு படிக்க செல்ல 55 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு 'விசா' வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிப்பதை இந்திய மாணவர்கள் அதிகளவில் விரும்புகின்றனர். விசா கேட்டு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.