சென்னை :தமிழகத்தில் செப்.1 முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதார துணை இயக்குனர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

அனுப்பியுள்ள சுற்றிறிக்கை:

பள்ளியின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்திருக்க வேண்டும். கிருமி நாசினி, கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

மாணவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். விட்டமின் - சி' போன்ற சத்து மாத்திரை நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க தேவையானவற்றை வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வகுப்பறையில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.மாணவருக்கு இடையே 6 அடி இடைவெளி அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.