சென்னை: பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் தலைமை வகிக்கிறார்.இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்று, பள்ளி கல்வித் துறையின் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், பள்ளிகளை மீண்டும் திறந்து, நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களின் கருத்துக்களையும் கேட்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.