சென்னை---கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுதற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், இடைநிலை பள்ளி இறுதி வகுப்பு தற்காலிக சான்றிதழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ச்சி சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ் என்ற வாசகங்கள் இடம் பெறவில்லை.மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம், நிரந்தர பதிவெண், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, தேர்வு எண் மற்றும் பயிற்று மொழி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2021, பிப்., 25 அரசு ஆணையின் படி, பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சான்றிதழை மாணவர்கள் தாங்களே, https://apply1.tndge.org/dgeresultlist என்ற இணையதள இணைப்பில், வரும், 31 வரை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும் என, அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.