உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக தளமான வாட்ஸ் அப்பில் ஹெச்.டி வீடியோ அனுப்பும் வசதி விரைவில் வர இருக்கிறது.

அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் ஆட்டோமேட்டிக், பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோமேட்டிக் விருப்பத்தினை தேர்வு செய்வதன் மூலம் வீடியோவை அப்படியேவும், பெஸ்ட் குவாலிட்டி ஆப்ஷன் மூலம் வீடியோவை உயர் தரத்தில் ஹெச்.டியாக அனுப்பலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேட்டா சேவ் முறை மூலம் வீடியோக்களின் அளவைக் குறைத்து அனுப்பலாம் . வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசும்போதும் வீடியோவின் தரத்தை நிர்ணயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் வாட்ஸ் அப் விரைவில் வழங்க உள்ளது.

வாட்ஸ் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஹெச்.டி வசதி இல்லை. வீடியோக்கள் சாதாரண அளவிலேயே பகிரப்படுகின்றன. இந்த நிலையில் மாற இருக்கிறது. அடுத்த வர உள்ள 2.21.14.6 அப்டேட்டில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.