சென்னை:முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5 தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்க, மத்திய -- மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் தேசிய அளவிலான விருதுக்கு ஆன்லைன் பதிவு, ஜூன் 1ல் துவங்கியது. கடந்த 30ம் தேதி அவகாசம் முடிய இருந்த நிலையில், இன்று வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன்படி, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் இன்று முடிகிறது.