சென்னை: டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த துறைத்தேர்வுகள் - மே 2021, கொரோனா பெருந்தொற்று காரணமாக வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் துறைத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கொள்குறி வகையிலான கணினி வழி தேர்வு ஆகஸ்ட் மாதம் 16, 17, 18 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், விரிந்துரைக்கும் வகை தேர்வு 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இத்தேர்வுக்குரிய திருத்தப்பட்ட கால அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.