சென்னை:தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. புதிய துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தலைவராக, உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். துணை தலைவராக பேராசிரியர் ராமசாமி; உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமி; பணிவழி உறுப்பினர்களாக, நிதித் துறை கூடுதல் தலைமை செயலர், கவர்னரின் செயலர், உயர் கல்வித் துறை முதன்மை செயலர், பல்கலை மானியக்குழு செயலர், கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆகியோர் அங்கம் வகிப்பர்.

துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசாமி, அழகப்பா பல்கலை துணைவேந்தராக பணியாற்றியவர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2006 ஆக., 14 முதல் 2011 டிச., 9 வரை ராமசாமி இப்பதவியில் இருந்தார். உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமி, 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லுாரியில் இணை பேராசிரியராக வரலாற்று துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.