புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்துவதற்கும், அதை ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வை, ஜூலை, 1ம் தேதி முதல் அமல்படுத்தி வழங்க, மத்திய நிதித் துறை, உத்தரவு பிறப்பித்தது.இந்த அறிவிப்பால் 48 லட்சம் மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்அடைவர்.