சென்னை : எம்.எல்., படிப்புக்கான தேர்வு அட்டவணையை, சென்னை பல்கலை வெளியிட்டுள்ளது.சென்னை பல்கலை சார்பில் தனி படிப்பாக, எம்.எல்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும், 15ல் துவங்குகிறது. தேர்வு அட்டவணையை, www.unom.ac.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் தெரிவித்துள்ளார்.