புதுடில்லி: லட்சக் கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சித்ததால், நீட் தேர்வு இணையதளம் சற்று நேரம் முடங்கியது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்பட தொடங்கியது.நாடு முழுவதும் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. இருப்பினும், ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் சற்று நேரம் neet.nta.nic.in தளம் முடங்கியது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்பட்டு வருகிறது.