சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வரும் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். இதையொட்டி, மத்திய - மாநில அரசுகளின் சார்பில், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஜூன் 1ல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது. இதற்கான காலக்கெடு, நேற்று முன்தினம் முடிந்த நிலையில், 10ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.