25 ஆயிரம் பேர் ஒரே நாளில் பதிவுஇன்ஜி., கவுன்சிலிங்குக்கான ஆன்லைன் பதிவு துவங்கிய முதல் நாளிலேயே, 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, 25 ஆயிரத்து, 611 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.அவர்களில், 10 ஆயிரத்து, 84 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். பதிவு செய்தவர்களில், 5,363 பேர் சான்றிதழ்களை பதிவேற்றிஉள்ளனர்.