தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன். சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தேன்.

மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை, மேகதாது அணை பிரச்சினை குறித்துப் பேசவில்லை என கூறினார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும். கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை எனவும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.