சென்னை:பள்ளிகளை திறப்பது மற்றும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடுவது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார்.


நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பதுமாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பள்ளி கல்வி இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி கல்வி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.