சென்னை:எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், திறன் வளர்ப்பு பயிற்சி மேற்கொள்ளும் வகைகளில், ஐ.டி.ஐ., என்ற தொழிற்பயிற்சி நிலையங்களில், பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் சேர, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளம் வழியே வரும் 28க்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும்.சந்தேகங்கள் இருந்தால், 94990 55612 மற்றும் 94990 55618 என்ற எண்களில், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'வாய்ஸ் கால்' வழியே தொடர்பு கொள்ளலாம்.