தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,

கரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது. மேலும், 2021-22 கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுள்ளன.

பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீதமும், பள்ளிகள் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தையும் வசூலித்துக் கொள்ளலாம்.

மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வசூலிப்பது குறித்து பின்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.