சென்னை:தமிழகத்தில் பள்ளி கல்லூரி திறக்க தடை விதித்தும் ஆசிரியர்களை பள்ளிக்குவர அனுமதித்தும் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கட்டுப்பாடு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள செயல்பாடுகளுக்கு அனுமதிநோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட வேண்டும்.நிர்வாகப்பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி,பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள செய்ய அனுமதி.தொழிற்பயிற்சி நிலையங்கள் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி கூடங்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்க அனுமதி நீடிக்கும் தடைகள்திருமணநிகழ்ச்சியில் 50 பேர் , இறுதிசடங்கு நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் தடை நீடிக்கிறது. புதுச்சேரி தவிர்தது பிற மாநிலங்களுக்கிடையேயான அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்படுகிறது.சமுதாயம் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை,சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை, திரையரங்குகள் செயல்பட தடை, மதுக்கூடங்கள் நீச்சல் குளங்கள் செயல்பட தடை, பள்ளிகள்,கல்லூரிகள் ஜூலை 31 ம்தேதி வரையில் செயல்பட தடை, பொழுதுபோக்கு விளையாட்டு , கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.