சென்னை:பள்ளி கல்வித் துறையில், நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இடமாறுதல் நடவடிக்கை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, இரண்டு முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.அரியலுார் மாவட்ட சி.இ.ஓ., தியாகராஜன், திருவாரூருக்கும்; திருவாரூர் சி.இ.ஓ., ராமன், அரியலுாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.