தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர் , செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை , கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் என மொத்தம் 22 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை , உணவு , தங்கும் இடம் உட்பட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது.
0 Comments
Post a Comment