அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு , அப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டது. 


1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு பணிந்தனுப்பப்பட்டதில் , கீழ்க்காணும் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக பார்வை 3 ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே கீழ்க்காணும் கூடுதல் விவரங்களை உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.