இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தின் கூடுதல் செயலர் (தேர்வுகள்) எஸ்.கே.கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:


தற்போது நிலவிவரும் கரோனா பெருந்தொற்று பாதிப்பையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,சி.ஏ. ஃபவுண்டேஷன் தேர்வை தள்ளிவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஃபவுண்டேஷன் தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் நடைபெறும். தேர்வு கால அட்டவணை குறித்த விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.


சி.ஏ. ஃபவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை (www.icai.org) அவ்வப்போது பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்