சென்னை:எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணங்கள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

எஸ்.பி.ஐ.,யில் மாதம் நான்கு முறை வரை, வங்கியிலோ அல்லது ஏ.டி.எம்., வாயிலாகவோ பணம் எடுக்கலாம். அதன் பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்படும். இந்த கட்டணம், இதற்கு முன் 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி.,யாக இருந்தது.

மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நிதி ஆண்டுக்கு 10 இதழ்கள் உடைய காசோலை புத்தகம் இலவசம். கூடுதலாக 10 இதழ்கள் உடைய காசோலைகளுக்கு 40 ரூபாய்; 25 இதழ்கள் உடைய காசோலைக்கு 75 ரூபாய்; அவசர காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் கட்டணம்.இந்த கட்டண விகிதங்கள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.