கருத்து தெரிவிக்க இன்றே கடைசிதமிழகத்தில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிடம், நீட் தேர்வு தொடர்பான கருத்துகளை, ஒவ்வொருவரும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் வாயிலாகவோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்திலும், நேரடியாகவும் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாள். அதன்பின், அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் நிறுத்தம்