சென்னை : ''ஆன்லைன் வகுப்புகளுக்கான, வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விட்டன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயம் செய்வதை, இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, இரண்டு வாரங்களுக்குள் மதிப்பெண் வழிகாட்டு முறைகளை தயாரிக்கும்.ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அதில் முறைகேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியிடப்படும். 'நீட்' தேர்வு வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு; அதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கூறினார்.