பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை.
தற்போதைய நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்கவில்லை. கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் முறை தொடரும்.
ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
0 Comments
Post a Comment