சென்னை:பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 - -21ம் கல்வி ஆண்டில், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 10ம் வகுப்புக்கான பொது தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, அவர்களுக்கு 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மட்டும் வழங்கப்படும்; அதோடு, 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டிய பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த, அரசு அனுமதி அளித்தது. இதையொட்டி, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், நேற்று அரசாணை பிறப்பித்தார்.அதில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரும் தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்குமாறு கூறப்பட்டுள்ளது.