ஒடிசா மாநிலம் தால்ச்சேர் பகுதியில் வசிக்கும் சரோஜ் மோஹரானா என்ற ஆசிரியர் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின்னர் தமது உடலில் காந்த சக்தி ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்.


65 நாட்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் சில இரும்புப் பொருட்களைத் தொட்ட போது அவை அவர் உடலுடன் ஒட்டிக் கொண்டதாக கூறினார்.


வேறு எந்தப் பிரச்சினையும் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.இத்தகைய காந்த சக்தி தமது உடலில் ஏற்கனவே இருந்ததா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை