சென்னை:தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவிப்புமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்த தேர்வு முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான மாற்று சேர்க்கை முறைகளை வகுக்க வேண்டும்.அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகளை ஆராய்ந்துஅரசுக்கு பரிந்துரைஅளிக்க ஓய்வு பெற்றநீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்திருந்தார்.

அதன்படி உயர்நிலை குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார். குழுவின் தலைவராகஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.நடவடிக்கைகுழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் ஜவஹர்நேசன் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர்சட்டத்துறை அரசுசெயலர் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர் மருத்துவ கல்விஇயக்குனர் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலராக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார்.இக்குழு உரிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாக்க தேவையான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசுமேற்கொள்ளும்.