புதுடில்லி : வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளோரை சுலபமாக கண்டுபிடிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் வரி வரம்பிற்கு மேற்பட்ட தொகையை, டி.டி.எஸ்., எனப்படும் மூல வரியாக பிடித்தம் செய்கின்றன. அதுபோல மதுபானம், உலோகம், மரம் உள்ளிட்டவற்றுக்கு வாடிக்கையாளரிடம், டி.சி.எஸ்., எனப்படும் மூல வரி, விற்பனை யாளரால் வசூலிக்கப்படுகிறது. இந்த இரு வகையிலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர் களுக்கு, ஜூலை 1 முதல் கூடுதலாக டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்பட உள்ளது. இத்தகையோரை சுலபமாக அடையாளம் காண்பதற்கு வருமான வரி வலைதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒருவரின் 'பான்' எனப்படும், வருமான வரி கணக்கு எண் வாயிலாக அவர் கூடுதல் வரி விதிப்பிற்கு உட்பட்டவரா என்பதை, நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் அறியலாம். அதன் அடிப்படையில் கூடுதலாக டி.டி.எஸ்., அல்லது டி.சி.எஸ்., வசூலிக்கலாம். தற்போது வருமான வரித் துறை அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டி.டி.எஸ்., அல்லது டி.சி.எஸ்., பிடித்தம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோரின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
0 Comments
Post a Comment