சென்னை:சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, உலர் உணவு தானியங்கள் மற்றும் முட்டை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், சத்துணவு மையங்கள் செயல்படவில்லை.சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தை களின் உடல் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உலர் உணவு தானியங்கள், அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், மே மாதம் சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு உலர் உணவு தானியங்கள், முட்டை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துஉள்ளது.

அதன்படி ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு மற்றும் தலா 10 முட்டைகள் வழங்கப்பட உள்ளது.சமூக நலத்துறை கமிஷனர், உலர் தானியங்களை கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.